மார்ச்சில் மழை



இலங்கையில் தற்போது வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் சில நாட்களில் மழை வீழ்ச்சியின் அளவு அதிகரிக்கப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி முதல் 04ஆம் திகதி வரை நாட்டில், மழை வீழ்ச்ச அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்ளம் மேலும் தெரிவித்துள்ளது. 

மேலும், பிற்பகல் 5.30மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும் கடற்கரை பிரதேசங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு - கிழக்கு பகுதிகளில் காற்று 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் புத்தளம் வழியாக ஹம்பாந்தோட்டை பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வழியாக காலி திருகோணமலை கடற்கரை பகுதிகளுக்கு காற்றின் வேகம் 50-55 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும் என்று திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 கிழக்கு ஊவா சப்ரகமுவ மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில், மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி காணப்படும். கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை அதிகமாக காணப்படுவதால் 55-60 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.