சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை சட்டப்படி குற்றமாகும் என்று கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது சட்டப்படி குற்றமாகும். தவறு செய்தவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தினால் அதற்கு பெயர் தண்டனை ஆகாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சிறை மாற்றம் கோரி குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதை கர்நாடக அரசின் சார்பில் கண்டிப்பாக ஆட்சேபணை தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சில வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பட்டுள்ளதாக சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதற்கு கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

