மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு



மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான எஸ்.கமலநாதன் எனும் 40 வயதையுடையவரே இவ்வாறு யானையின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பங்குடாவெளியைச் சேர்ந்த இவர் வயல் வேலைக்காக சென்றவிடத்தே அருகில் இருந்த நீர் ஓடையில் வைத்து யானையினால் தாக்குதலுக்கு உள்ளக்கப்பட்டிருக்கின்றார்.
சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.