சர்வதேச உதவிகளை நாடும் ரோஹிங்யா



சர்வதேச உதவிகளை வேண்டி நிற்கும் மியன்மார்  ரோகிங்கிய முஸ்லிம்கள் .
=====================================

2017.02.21. பலவந்தமாக மியன்மார் அரசால் விரிட்டப்பட்ட மக்கள் தற்போது பங்களாசேஷ் இல்லைப்புறப் பகுதிகளில் கூடாரங்களை அமைத்துக் கொண்டு எவ்வித வசதிகளுமின்றி பாரி பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள் .

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றி சுருக்க அறிமுகம்
=====================================

மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது. ஆனால், குடியுரிமையை மறுக்கும்
இராணுவச்சர்வதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள்.மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது. அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள்.

01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக்குடிகள் )
02) பஷுஷ் ( சீனா, தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா, பங்களாதேஷ் பூர்வீகத்தினர் )

இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்களல்ல என்று 1956 அரசாங்கம் மறுத்தது. இதனால் 1978 இல் இராணுவ அரசாங்கம் அக்யாத் நகரில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்தது. இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச்செயல்கள் ஆரம்பித்தது.

1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்களை தீவிரமடைந்தது. இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர். அதே போல் 1996 இல் மட்டும் 56 பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று கூட ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை படுமோசமாகவுள்ளது.

இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் இன்று பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதால் உண்ணுவதற்கு உணவில்லை. உடுப்பதற்கு உடையில்லை. வாழ்வதற்கு நாடில்லாமல் சிறு பிள்ளைகள். கற்பணிப் பொண்கள், வயோதிபர்கள், கடலில் தத்தழித்துக் கொண்டு உயிரை விடுகின்றார்கள்.

இது தான் ரோஹிங்கியா முஸ்லிம்களின் சோக நிலை.பிராதிப்போம் ஒன்றாக .

 AM. ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை