100 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல்



(க.கிஷாந்தன்)

அட்டன் டிக்கோயா - தரவளை கீழ் பிரிவில் தொலைநோக்கு வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 100 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 21.02.2017 அன்று நடைபெற்றது.

வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் டிக்கோயா தோட்டத்தின் பங்காளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக டிக்கோயா மற்றும் லொனக் தோட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக கடன் அடிப்படையில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்கும் தலா நான்கு அரை இலட்சம் ரூபா கடன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி, பிரதான நிறைவேற்று அதிகாரி பினேஷ் பனன்வள, அட்டன் வட்டவளை உதவி முகாமைத்துவ பணிப்பாளர் ரொபின் வின்ட்டர், டிக்கோயா தோட்ட முகாமையாளர் மஹிராஜ், சமரவீர ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.