சுதந்திர தின ஒத்திகை: கடற்படை அதிகாரி படுகாயம்



சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஒத்திகையின் போது, கடற்படை அதிகாரியொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகொப்டரில் இருந்து குதித்த பராசூட் வீரரே இவ்வாறு  காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.