ஊருப்பக்கம் ஒரு சொலவடை சொல்லுவாங்க. 'அரைச்சொல்லாவே பேசாதே!'னு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு முதல்வர் கனவே பெரிய கேள்விக்குறியாகிப்போன சசிகலாவின் சமீபத்திய பேச்சுக்களை உற்று நோக்கினாலே நமக்கு மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த சொலவடையின் அர்த்தம் விளங்கும். ஆமாம் பாஸ். தன் வாயாலேயே தெரிந்தோ தெரியாமலோ நெகட்டிவ் விஷயங்களை உளறிக் கொட்டி இருக்கிறார் சின்னம்மா @சசிகலா!

