"தெல் பாலா" என்ற 59 வயதுடைய பாதாள உலக குழுவின் தலைவர் ஒருவர் சென்னையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த நபரின் சடலம் நேற்றைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பொரளை ஜயரட்ன மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் மீது பல போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நபரின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

