முறுகண்டியில் புகையிரதத்துடன் மோதிய வேன்



முல்லைத்தீவு முறுகண்டிப் பகுதியில்புகையிரதமும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் வேன் சாரதி அதிஸ்டவசமாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார்.

ஸ்கந்தபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வேன் முறுகண்டிப்பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபொழுது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு சரியாக வேலை செய்யாமை காரணமாக யாழில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வேனில் சாரதி மட்டுமே பயணித்தமையால் உயிர்ச் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை. 

வடமாகாணத்தை பொறுத்தவரை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினாலும் சமிக்ஞை விளக்குகள் சீரின்மையாலும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ள போதும் இதுவரை மாற்று நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.