எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக தற்போது 60,000 ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குருணாகலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
இந்தநிலையில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடம் காரணமாக திருகோணமலை அபயபுர ஆரம்பநிலை பாடசாலையின் செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
பாடசாலைக்கு ஆசிரியர்களை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை காரணமாக பெற்றோர் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் புறக்கணித்து வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.