(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும்மான மதிப்புக்குரிய ஹனீபா மெளலவி நேற்றிரவு காலமானார்.
(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிர் ராஜிஊன்).
கிழக்கிலங்கை அரபிக் கல்லுாரியில் மௌலவியாக வெளியாகிய இவர் சிறந்த ஒரு சன்னமார்க்கப் போதகராக.அக்கரைப்பற்று பட்டினப் பள்ளி உட்பட கிழக்கின் பல்வேறு இடங்களில், சன்மார்க்கப் பேருரைகளை நிகழ்த்தி பலரதும் அபிமானத்தைப் பெற்றவர்.
கடந்த ரமழானில் புனித லைத்துல் கத்ர் இரவிலும் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளியில் இவர் ஆற்றிய மார்க்ச் சொற்பொழிவு ஆத்மார்த்தமானது.சிக்கலான விடயங்களை எளிதாக புரிய வைப்பது இவருக்கு கை வந்த கலை.
பாரபட்சமின்றி பாமர மக்களினதும், ஏழைகளினதும் கல்விக் கண் திறக்கப்படவேண்டுமென்பதில் தீராத அக்கரை கொண்ட சமூக சேவையாளர்.
இவரது பரிவால் துயருறும் இவரது புதல்வர் சட்டத்தரணி ஹசன் றுஸ்தி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரஙகல்கள்!
இறைவன் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவனின் நல்லடியார்களுக்கான சுவனத்தைக் கொடுத்தருள்வானாக..

