புன்னக்குடாவில் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டன



மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடாவில் அளவீடு செய்யப்பட்ட காணிகள் இன்று அடையாளப்படுத்தப்பட்டன.
அதற்கமைய, குறித்த பகுதி காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி என பதாகை பொருத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவினூடாக கடந்த 8 ஆம் திகதி முதல் காணி அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் பிரதேச அரசியல்வாதிகளால் புன்னக்குடாவில் அரச காணிகள் சிலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதனை அடுத்து, பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கமைய, புன்னக்குடாவிலுள்ள அனைத்து அரச காணிகளையும் அளவீடு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், நில அளவை அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் காணி அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.