எம்.எஸ். முஹம்மது இக்ரிமா
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு டெங்கு நோய் கிண்ணியாவை ஆக்கிரமித்திருக்கிறது. கிண்ணியாவின் டெங்கு பரவும் வேகம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வருகின்றது. இது வரை 11 மரணங்கள் சம்பவித்துள்ளன. வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் மரணங்கள் 15 ஐயும் தாண்டும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு ஒழிப்பிற்காக ஊர் மக்கள், அனைத்து அரச, சமூக நிறுவனங்கள் அனைத்தும் களத்தில் நின்று வேலை செய்தபோதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதை கட்டுப்படுத்தாவிட்டால் கிண்ணியாவுக்கு வெளியே இதே வேகத்தில் அயல் ஊர்களுக்கும் வேகமாக பரவும் ஆபத்து இருப்பதுடன் இதுவரை திருகோணமலை நகரம், தம்பலகாமம், மூதூரில் 3 மரணங்களும் சம்பவித்துள்ளன.
அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு முகம் கொடுப்பதற்குரிய வைத்திய உபகரணங்கள், போதிய வைத்திய நிபுணர்கள், இடப்பற்றாக்குறை, போதிய கட்டில்கள் இன்றி கிண்ணியா வைத்தியசாலை தடுமாறுகிறது.
களத்தில் வேலை செய்யும் தன்னார்வ பணியாளர்களின் குழந்தைகளும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் களப்பணியிலிருந்து விலகிச்செல்லும் ஆபத்து இருக்கிறது. இது நிலைமை மேலும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் சேவையில் இருக்கும் மாவட்ட வைத்திய அதிகாரி (DMO), சுகாதார வைத்திய அதிகாரி (MOH) ஆகியோரின் பிள்ளைகளும் டெங்கினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பெரும் தியாகத்துடன் சேவை புரிகின்றனர். இதனால் அவர்களும் மன அழுத்தம் (stress) காரணமாக களைத்தநிலையை அடைய வாய்ப்புள்ளது.
அதே போல சமூக நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்படாத நிலையில் களத்தில் வேலை செய்வதும் பாரிய குறைபாடாகவுள்ளது.
குறுகிய காலத்தில் வேகமாக நோய் பரவும் நிலையில், ஏற்கனவே 9 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில், இதுவரை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அனர்த்த நிலை பிரகடணப்படுத்தப்படாவிட்டாலும் இதுவொரு அனர்த்த நிலைதான் (Disaster situation) என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும் அரசினால் அணர்த்தமென பிரகடணப்படுத்தப்படாதிருப்பது பரிகார, சிகிச்சை வேலைகளை மந்த கதியில் நடைபெறவைத்துள்ளது. எனவே இது உடனடியாக 'அனர்த்த நிலை ' எனப்பிரகடணப்படுத்தப்படல் வேண்டும் என்பதே கிண்ணியா மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் அணர்த்த நிலையை வைத்துக்கொண்டு சாதாரண நிலை போன்று வேலை செய்வது அணர்த்தத்தின் அடுத்த விளைவான நெருக்கடி நிலையை (Crisis situation) இலகுவில் தோற்றுத்துவிடும்.
நெருக்கடி நிலையென்பது ஒட்டுமொத்த சமூகமும் குழப்ப நிலையில் இருப்பதாகும் (Collective stress situation). மேலும் இது, சமூகத்தில் அனேகர் வாழ்வதற்கான நிபந்தனைகளை சுற்றயலில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை எனவும் வரையறுக்கப்படுவதுண்டு.
மரணங்களும் அதிகரிக்க, அதிகரிக்க இந்த நிலைமையும் நீடிக்க, கலவர நிலையில் மக்கள் பின்வரும் குணாதிசயங்களை வெளிக்காட்ட ஆரம்பிப்பார்கள்.
1. எரிச்சல் உணர்வு (irritability)
2. பதட்டம் - Ancxiety,
3. அதிர்ச்சி - Trauma,
4. உதவியற்ற நிலை- helplessness
5. எதிலும் அக்கரையின்மை -Apathy
6. மன அழுத்தம் - Depression
7. அச்சவுணர்வு / பீதி - Panic
8. நம்பிக்கையீனம் - hopelessness
9. கோபம் - Anger
10. பயம் - Fear
11. எதிர்ப்புணர்வு - Denial
இவ்வாறான ஒரு நிலைமை உருவாகுவது பாரிய சிக்கல்களை உருவாக்கிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இளைஞர்களதும் பொது மக்களதும் தற்போதைய அசைவுகளை உற்றுநோக்கும்போது கிண்ணியா அந்த நிலையை அடைந்துவிட்டதா என எண்ணத்தோன்றுகிறது. நான் இதனை எழுதும்போது கூட இளைஞர்களின் ஆக்ரோஷமான அழைப்பு ஒன்றை முக நூலில் காணக்கிடைத்தது. சிலர் ஊரைவிட்டு இடம்பெயர்வதை காண முடிகிறது. நாளைய மரணம் நானா அல்லது எனது பிள்ளையா என எண்ணத்தோன்றுகிறது.
மற்றுமொரு முக்கிய விடயம்தான் வதந்திகளின் பரவுகை. "இது டெங்குவல்ல , இது வேரொரு நோய் திட்டமிட்டு கிண்ணியாவில் பரப்பப்பட்டுள்ளது" எனும் மனோ நிலை மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையை நீடிக்க விடக்கூடாது என்றால் உடனடியாக அணர்த்த நிலை பிரகடணம் செய்யப்படல் வேண்டும். அரசின் அனைத்து கவணமும் சக்தியும், கிண்ணியாவில் குவிக்கப்படல் வேண்டும். இல்லையெனின் மக்கள் கிளர்ந்தெழுவார்கள். வைத்தியசாலையில் கை வைப்பார்கள் ; வைத்தியர்களை தாக்க முனைவார்கள். இது நீண்டு சென்று சமூக தலைமை, அரசியல் வாதிகள் என தாக்குதல்கள் விரிவாகும் .
இதன் உடனடி விளைவாக வைத்தியர்கள் களத்திலிருந்து அகன்று செல்வார்கள்; வைத்தியசாலைகள் இஸ்தம்பிதமடையும்; தலைமைகள் கைவிரிப்பர், வைத்தியர்கள் கைவிரிப்பர் .... இவ்வாறு ஈற்றில் பாரிய சமூக அழிவை இது கொண்டுவந்துவிடும்.
இந்த நிலை உருவாக்க கூடாது. இதை தவிர்ப்பதற்கான ஒருங்கிணைந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளவே MOH காரியாலயத்தில் DENGUE RESPONSE COORDINATING COMMITTEE என்ற ஒன்றை சகல தரப்பினரும் உடன்பட்டு
உருவாக்கினோம்.
இதன் ஹோட் லைன் 0774122336 . இவ்வமைப்பு இன்றிலிருந்து தனது பணியை ஆரம்பிழ்துள்ளது
எனவேதான் இதில் அதிகௌரவ ஜனாதிபதி அவர்கள், கௌரவ பி்தமர், கௌரவ சுகாதார அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர் எமது அரசியல்வாதிகள் உடன் செயற்பட்டு அணரத்த நிலையை பிரகடணப்படுத்தி உடனடியாக ஆவன செய்தல் வேண்டும்.