06 வயது பிள்ளையுடன் ஆற்றில் குதித்த தாய்




கடுவலை பாலத்திற்கு முன்னால் பெண் ஒருவர் தனது 06 வயது பிள்ளையுடன் ஆற்றில் குதித்துள்ளதாக செய்தியாளர் கூறினார். 

ஆற்றில் இருந்து பிள்ளையை மீட்கும் போதே உயிரிழந்திருந்ததாகவும், குறித்த பெண் காப்பாற்றப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பாலத்தின் சுவரில் பாரியளவில் இரத்தக்கரைகள் இருப்பதால் குழந்தை ஆற்றில் குதிக்கும் முன்னரே உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பியகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.