திருகோணமலை சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்




நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த பிக்குவை கைது செய்யுமாறு வலியுறுத்தி சட்டத்தரணிகள்    நேற்றுக்   காலை (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருகோணமலையில் கடந்த 24 ஆம் திகதி மாகாண சபைக்கு முன்பாக இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார். 

அவரின் உத்தரவை கிழித்து எறிந்து காலால் மிதித்த வேலையில்லா பட்டதாரியான பௌத்த பிக்குவை கைதுசெய்ய வலியுறித்தியும். கண்டித்தும் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று, தமது பணிகளை புறக்கணித்து நீமன்றத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.