ஊடகவியலாளர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சி நகரில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாரதி ஸ்ரார் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ. சபேஸ்வரன் தலமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நி கழ்வில் பிரதம அ திதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்நி கழ்வில் ´தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும்´ என்னும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கை, கலைப்பீட இணைப்பாளர் கலாநிதிஎஸ்.ரகுராம் நினைவுரை நிகழ்த்தினார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் சிவாராம் என்னும் தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உரையாற்றினார்.
இதேவேளை யாழ்.ஊடக அமையத்தினால் வழங்கப்பட்ட சிவராம் ஞாபகர்த்த விருது மறைந்த கேலிசித்திர கலைஞன் அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை யாழ். ஊடக அமையம் முதல் தட வையாக வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடக அமைப்புக்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள ஊடகவியலாளர்களும் கலந் து கொண்டனர்.

Post a Comment
Post a Comment