கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு நேற்று பிற்பகல் சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 145 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி கூறியுள்ளார்.
இதன் காரணமாக 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்கள், கொலன்னாவ டெரன்ஸ் டி சில்வா பாடசாலையிலும் அருகில் உள்ள மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பொலிசார், முப்படையினர் மற்றும் இடர் முகாமைத்துவ மத்தியநிலையம் ஆகியன இணைந்து நேற்று முதல் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதுடன், இன்றைய தினம் 04 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கண்காணிப்பின் கீழ் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
எவ்வாறாயினும் இவ்அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது்.


Post a Comment
Post a Comment