பங்களாதேஷ் அணி படு முன்னேற்றம். 45 ஓட்டங்களால் வெற்றி



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக 34 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை வீழ்த்தி லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனையை பெற்றார். 

எவ்வாறாயினும் 177 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. 

இலங்கை சார்பாக அதிகபட்சமாக கப்புகெதர 50 ஓட்டங்களை பெற்றார். 

முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன்படி இருபதுக்கு இருபது தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.