தெரண மீதான 5 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஒன்றை தவறாக வெளியிட்டமை தொடர்பில் தெரண ஊடகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணை மூலம் அந்த ஊடகம் மீதான 5 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு தவறு நடைபெறாவிடின் அது தொடர்பிலான அறிக்கையை வெளியிடுமாறு கடந்த 5 ஆம் திகதி ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவிற்கு ஒருவரை நியமிக்குமாறு தெரிவித்தமைக்கு தெரண ஊடகம் எவ்வித பதிலும் வழங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.