நீர்த்தாங்கி மீது ஏற முயற்சித்த வைத்தியர்கள் கைது



தேசிய வைத்தியசாலையின் நீர்த்தாங்கி மீது அனுமதியின்றி ஏற முயற்சித்து கைது செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த இரண்டு வைத்தியர்களும், வைத்தியசாலையின் நீர்த்தாங்கி மீது நேற்று மாலை ஏற முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த இரண்டு வைத்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த இருவரும் தேசிய வைத்தியசாலையின் நீர்த்தாங்கி மீது ஏறுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.