பறக்கத் நகருக்கு நீர் வழங்கல்



அண்மைக் காலமாக நகர திட்டமிடல் நீர் வழங்கல்  அமைச்சின் ஊடாக அக்கரைப்பற்றுப் பகுதியில் பல அபிவிருத்தி வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் நடை பெற்று வருகின்றன.

இத்தியடியிலிருந்து பொத்தானைப் பள்ளி வாசல் வரையான பாதையை நிர்மானிக்கவென 8,100,000.00 எண்பத் தொரு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்கரைப்பற்று - அம்பாறை வீதியின் ஆறாம் கட்டையில் அமைந்துள்ள பறக்கத் நகர் மக்களுக்கு இலுக்குச்சேனை சந்தியிலிருந்து பறக்கத் நகர் வரையிலான 2 Km தூரத்திற்கு  நீர்க் குழாயினைப் பொருத்தி பறக்கத் நகரின் குடி நீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்து அங்குள்ளவர்களுக்கு குடி நீர் வசதியை ஏற்படுத்துவதற்காக ரூபா 1,000,000.00 - பத்து இலட்சம் ஒதுக்கப்பட்டு நீர்க் குழாய் பதிக்கும் வேலைகள் உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடனபொத்தானை வீதி வேலைகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படவுள்ளன.

கடந்த வருடம் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சின் நடமாடும் சேவை அம்பாறை நகரில் நடை பெற்றது.  அதன் போது பறக்கத் நகர் மக்களின் குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதன் பயனாக பறக்கத் நகர் மக்களுக்கு நீர் வழங்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று காரியாலயத்திற்கு வருகை தந்த பறக்கத் நகர் வாசிகள் மத்தியில் கடந்த வியாழன் இரவு உரையாற்றும் போது ஸ்ரீ.ல.மு.க அக்கரைப்பற்று அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபை எதிர்க்கட்சி தலைவருமான S.L.M.ஹனிபா மதனி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் புதை பொருள் திணைக்களத்தினால் பொத்தானை பள்ளியை அண்டிய பிரதேசத்தில் போடப்பட்ட தடைக் கல்லையும், பாதுகாப்பு வேலியையும் பார்ப்பதற்கு கடந்த பெப்ருவரி மாதம் பொத்தானைப் பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்த றஊப் ஹக்கீம் அமைச்சரிடம் இத்தியடியிலிருந்து பொத்தானை பள்ளி வரையிலான வீதி பழுதடைந்துள்ளதால், அதனை புதிதாக நிர்மானித்துத் தருமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் பொது மக்கள் பயனிப்பதற்கு உகந்ததாக அமையும் வகையில் அவ்வீதி புனரமைப்புச் செய்யப்படவிருக்கின்றது.

இதே போன்று இன்னும் பல அபிவிருத்தி வேலைகளுக்கு மேலும்  நிதி ஒதுக்கீடுகள்  செய்யப்படும் என அமைச்சர் ஹக்கீம் அவர்கள்  கடந்த வாரம் தலை நகரில் அவரைச் சந்தித்த போது எமக்கு வாக்குறுதியளித்துள்ளார் என்றும் ஹனிபா மதனி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்பாளர் A.L.மர்ஜுன் Jp அவர்ளும் பரக்கத் நகர் பள்ளி வாசலின் தலைவர் A.M.பஸ்லுல்ஹக் அவர்களும், இலுக்குச்சேனை பள்ளி வாசலின் முன்னாள் தலைவர் A.L.M.பஸீர் அவர்களும் கலந்து கொண்டனர்.