கிண்ணியாவில் மாடு திருடிய ஊர்காவல் படை வீரர்




திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கால்நடைகள் தொடச்சியாக காணாமல் போவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விசாரணைகளை மேற்கொண்ட கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்பிரிவினர் நேற்று இரவு ஒருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்ப்பட்ட ஊர்காவல் படை வீரர் இடிமன் காவல் நிலையத்தில் கடமையாற்றுவர் என குறிப்பிட்ட கிண்ணியா பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.