மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (7) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பினை 24 மணித்தியாலயங்கள் முன்னெடுக்கப்போவதாகவும் நூற்றுக்கு மேலான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

