சம்மாந்துறை அல்-மர்ஜான்முஸ்லிம் மகளிர் கல்லூரியை தேசிய பாடசலையாக தரமுயர்த்துவது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலைமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, அல்-மர்ஜான்முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி எஸ்.ஏ.எம். சலீம், பாடசாலையின் ஆசிரியர் குழாம், பாடசலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை வயக்கல்வி அலுவலகத்தின் கீழ் அமைந்துள்ள பென் மாணவர்கள் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை என்ற அடிப்படையில் தேசிய பாடசாலையாக தரமுயத்துவதன் அவசியத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் முன்வைத்தார்.


Post a Comment
Post a Comment