சீரற்ற காலநிலையால் 193 பேர் பலி



மண்சரிவு மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும், 99 பேர் இதனால் காணாமல் போயுள்ளனர். 

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 76,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு, 575,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.