வெலிக்கட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள், இன்றைய தினம் (30) தங்களது பகலுணவை எடுத்துக்கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர்.
சுமார் மூவாயிரம் பேர் அடங்கிய இந்தச் சிறைக்கைதிகள், தங்களது பகலுணவை, அனர்த்தங்களுக்கு இலக்காகியுள்ள மக்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
கைதிகளின் இந்தத் தீர்மானத்தை மதிக்கும் வகையில், அவர்களுடைய மூவாயிரம் உணவுகளுடன் இன்னும் மூவாயிரம் உணவுப் பொதிகளைச் சேர்த்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் ஹிந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்த உணவுப் பொதிகளை விமானப் படையினரின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைவாக, உணவு தயாரிக்கப்பட்டு, பார்சல்கள் செய்யப்படுவதைப் படங்களில் காணலாம்.


Post a Comment
Post a Comment