அப்துல் றவுப் அறிவாரா கொண்டுவட்டுவான் நீர்ப்பிரச்சினையை?



அண்மைக் காலமாக அம்பாரைக் கொண்டுவட்டுவான் (Treatment Plant) நீர்ச் சுத்திகரிப்பு நிலைய இயந்திரங்கள் பழுதுபட்ட நிலையில் காணப்படுகின்றது. அம்பாரை கொண்டுவட்டுவான் 5 நீர்ச் சுத்திகரிப்பு பம்புகளில் 3 மாத்திரமே இயங்குகின்றது..  அதில் 2 இயங்காமலுமுள்ளது. அம்பாரை மாவட்டத்தின் அக்கைரைப்பற்று முதல் மருதமுனை வரையும், இறக்காமம் முதல் திருக்கோயில் வரையும் நீர் வினியாகம் இங்கிருந்துதான் மேற்கொ்ள்ளப்படுகின்றது.

திடிரென இவ் இயந்திரங்கள் பழுதுபடுவதால் அல்லது இயங்க மறுப்பதால் நீர் வெட்டு முன்னறிவித்தலில்லாமலும், முன்னறிவித்தலுடனும் மேற்கொள்ளப்படுகழன்றது. இது மக்களின் தினாந்தரச் செயற்பாடுகளைச் செய்வதற்குத் தடையாகவும் உள்ளது.அவ்வாறுதான் திருத்த வேலையின் பின்பு வருகின்ற நீர், அதி கூடுதலான குளோரின் கொண்டதாகவும் காணக் கிடைக்கின்றது.

அம்பாரைக் கொண்டுவெட்டுவானில் உள்ள பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள், எத்தனை தடைவைகள் பழுதுபார்ப்புக்களை மேற்கொண்டாலும், பயினில்லை, மீண்டும் மீண்டும் இப் பிரச்சினை ஏற்படுமென்று தெரிவிக்கின்றனர்.புதிய இயந்திரத்தை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் நீரின்றி மேல் மாகாண முஸ்லிம்கள் 
பட்ட அவஸ்தைகள்  போல், அம்பாரை மாவட்ட மக்களின் நிலையும் எழுமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

நீரக் கட்டணம் செலுத்தாமல், தாமதித்துக் கட்டணம் செலுத்தப்படும் சந்தர்பங்களில நீர் துண்டிப்பை மேற்கொள்ளும், நீர் வடிகாலமைப்புச் சபை, மக்களின் கட்டணத்தைக் கொண்டாவது,புதியதொரு சுத்திகரிப்பு இயந்திரத்தை அம்பாரையில் நிறுவுவதற்கு முட்படவும் வேண்டும்!

நீர் வழங்கல் அமைச்சராக செயற்படும் அப்துல் றவுப் ஹக்கீம் அவர்கட்கு!

இப் பிரச்சினை பற்றி அறியாமல், அறிய விரும்பாமல் இருந்தாலும், இச் சேதி  கேட்டவுடனாவது, இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பது மக்களின் கோரிக்கை!