நாட்டில் 14 மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுகின்றது. இந்த வரட்சி காரணமாக 2 இலட்சத்து 61 ஆயிரத்து 467 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 58 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணம், வடக்கு மாகாணம் , தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணங்களில் கடந்த காலங்களாக அதிகளவிலான வெப்பத்துடனான காலநிலை நிலவி வருகின்றது. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள வரட்சியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரட்சியினால் வடக்கு மாகாணமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 1 இலட்சத்து 32 ஆயிரத்து 41 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 5 ஆயிரத்து 523 பேர் பாதிக்ப்பட்டுள்ளனர். அதனையடுத்து மேல் மாகாணத்தில் அதிகளவான வெப்பத்துடன் கூடிய சூழல் காணப்படுகின்றது.
இங்கு 59 ஆயிரத்து 766 குடும்களை சேர்ந்த 2 இலட்சத்து 51 ஆயிரத்து 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக வடமேல் மாகாணம் வரட்சியினால் அதிகபடியாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 36 ஆயிரத்து 99 குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 27 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் வற்றிப் போயுள்ளன. நிலக்கீழ் நீர் 27 அடிக்கும் கீழிருந்தே வற்றிப்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விவசாய தொழில் பெரிதும் பாதிக்கப்டப்டுள்ளதாக அரசாங்ம் தமக்கான நிவாரணங்களை பெற்றுத்தருவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதிவாள் மக்கள் கோரியுள்ளனர்.


Post a Comment
Post a Comment