முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம் பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது.
இதன்மூலம் நோன்பு பிடிக்கும் மக்களின் ஊடாக வருமானத்தை ஈட்டவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப் போகின்றனர். முஸ்லிம் அமைச்சர்கள் பதில் வழங்குவார்களா என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட வியாபார பண்டம் அறவீட்டு சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம் பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது.
விசேட வியாபார பண்டம் அறவீட்டு மூலம் பேரீச்சம்பழத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், உருளைக் கிழங்கு இறக்குமதி உணவு வகையில் அதிகரிப்பதன் ஊடாக பயிர்ச்செய்கையாளர்கள் இலாபம் பெறுவார்கள் என கூறமுடியும். எனினும் பேரீச்சம்பழ வரி அதிகரிக்கப்படுகின்றது என்றால் இங்கே பேரீச்சம் பழம் பயிரிடப்படுகின்றதா? பேரீச்சம்பழ பயிர்செய்கையாளர்கள் இலங்கையில் உள்ளனரா? இல்லை நோன்பாளிகளை வைத்து அரசாங்கம் தனக்கு இலாபம் ஈட்டவே முயற்சிக்கிறது. இது பெரும் அநியாயமாகும்.
எனவே இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப் போகின்றனர். பெரிதாக தம்மை முஸ்லிம் தலைவர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் என்ன பதில் வழங்க போகின்றனர். முஸ்லிம் அமைச்சர்கள் பதில் வழங்குவார்களா?
இந்த மாதம் முஸ்லிம்களின் நோன்பு ஆரம்பமாகின்றது.
இந்த மாதம் முஸ்லிம்களின் நோன்பு ஆரம்பமாகின்றது.
இதனை அறிந்தே இவ்வளவு காலம் அல்லாமல் தற்போது பேரீச்சம்பழ வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
அத்துடன் சீனாவுடன் இம்மாதம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.
சீனர்கள் இலங்கை வந்தால் பீல்ட் மார்ஷலினால் கூட ஒன்றும் செய்ய முடியாது.
தற்போது சீனர்கள் அமெரிக்காவை கூட ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரிய சந்தையை கொண்ட நாடுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என கேள்வி எழுப்பினார்.
தற்போது சீனர்கள் அமெரிக்காவை கூட ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரிய சந்தையை கொண்ட நாடுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என கேள்வி எழுப்பினார்.

Post a Comment
Post a Comment