நேபாள ஜனாதிபதி வித்யா தேவி,இலங்கையில்



சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேபாள ஜனாதிபதி வித்யா தேவி, இன்று (13) இலங்கைக்கு வந்துள்ளார். இவர், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்கப்பட்டார். கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில், நாளை (14) இடம்பெவுள்ள, சர்வதேச வெசாக் தின நிகழ்வின் நிறைவு வைபவத்தில் இவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.