பள்ளிக்குடியிருப்பு லாபிர் விளக்கமறியலில்





(சிறி)
அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் வைத்து பெற்றோல் நிரப்புமிடத்தில், ஒருவரை தாக்கிவிட்டுத் தலைமறைவாகியிருந்த பள்ளிக்குடியிருப்பு லாபீர்,இன்றைய தினம் நகர்வு மனு ஒன்றின் முலம் ஆஜரானபோது, எதிர்வரும் 15 திகதி வரை  சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட கௌரவ  நீதிபதியும்,நீதவானுமாகிய அந்தோனிசாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.

கடந்த 27/04/2017 ம் திகதி நீதிமன்றில் லாபீருக்கும், சாராய பார் அனுமதிக்காக போலி உத்தரவுப்பத்திரத்தை வழங்கியதால், பாதிக்கப்பட்ட மாதவி டீச்சருக்குமான மற்றுமொரு வழக்கு நடைபெற்றது.

அத்தோடு, அம்பாரை வீதி, பெற்றோல் நிலையத்துக்கு அருகாமையில், ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக ஏற்கனவே அக்கரைப்பற்றுப் பொலிஸார் தேடிய வேளையில், இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்த, இச் சந்தேக நபர்,  அங்கு சிரேஸ்ட சட்டத்தரணி சஹீட் உட்டபட சில சட்டத்தரணிகள் மூலமாக, முன் பிணை பெறுவதற்கு விண்ணப்பித்திருந்ததனர்.

இது சம்மந்தமாக,அதேதினமே,நீதிமன்றானது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினை அழைத்து,  முன் பிணை தொடர்பில், விண்ணப்பம் செய்யுமாறு வேண்டியது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஜனாப்.ஜெமீல், தனது ஆட்சேபனையினை பிணை வழங்குவதற்குத் தெரிவித்திருந்தார்.

இது பிணை வழங்கக்கூடிய குற்றம் என்பதால், முன் பிணை அவசியமில்லை எனச் சுட்டிக் காட்டிய கௌரவ நீதிபதி,சந்தேக நபரின் சட்டத்தரணிகள் சார்பில் செய்யப்பட்ட பிணை விண்ணப்த்தினை நிராகரித்தார்.

குறித்த தினத்தில் சந்தேக நபர், பொலிஸ் நிலையத்தில் சரணடையாது,  நீதிமன்றின் பின் சுற்று மதி்லுக்கு மேலாகப் பாய்ந்து தப்பித்துச் சென்றிருந்தார்.அதன் பின்னர் சந்தேக நபருக்கு பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.