கல்லடியில் சடலம் மீட்பு



-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்-
 காத்தான்குடி, கல்லடிக் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை  இன்று (16) காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் காணப்பட்ட இச்சடலம் தொடர்பில் தமக்குப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.