(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்ப தாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 06.05.2017 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருக்குமே படுங்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment