பாசாலைகளில் புத்தக விற்பனையில் ஈடுபட்டு பகல் கொள்ளை



(இர்சாத்)
பாடசாலைகளில், பிரத்தியயேகமாக தமது பிரத்தியேக வெளீயீடுகளை, விற்பனை செய்து,அதனை வியாபாரமாக்கும் தந்திரம் நாடு தழுவிய ரீதியில், நடைபெறுகின்றது.

வெளிக் கடைகளில், இப்புத்தகத்தின் விலை பன் மடங்கு எனத் தெரிவிக்கும் அதிபர்கள், குறைந்த விலைக்குத் தருகின்றோம் என பச்சிளம் பிஞ்சுகளைத் துாண்டி,வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் உதிரத்தை உறிஞ்சுகின்றனர்.

அதற்கு அதிபர்களும், ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதுடன்,தரகுகளை உரிய வெளியீட்டாளர்களிமிருந்து மறைமுகமாகப் பெற்றும் வருவது,இரகசிய லாபமீட்டுவதும் இலஞ்சமாகும். இதற்கு கல்விக் காரியாலய அதிகாரகளும் துணை போகின்றனர். 

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின், அஸ் ஸாஹிரா பாசலையில் ருபா 150/- கொண்டு வருமாறும், அக்ரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் 40/- கொண்டுவருமாறும் தரம் 5இற்கு உட்பட்போரிடம் வேண்டப்பட்டுள்ளது. அல்லலுற்ற பெற்றோர் முறையிட்டுள்னர். இந்தக் குறித்த புத்தகங்கள் தவிர, வேறு புத்தங்களை வாங்கக் கூடாதெனவும் எச்சரிக்கையும் விடுத்துமுள்ளனர்.

குறித்த ஆசிரியர்களின் புத்தகங்கள் விற்பனை செய்யப்படாமல் தனியார் கடைகளில் நாறிக் கிடக்கின்றது. இதனைப் படித்துத்தான் சித்தி பெற வேண்டுமாயின்,ஏன் இத்த்கைய தேக்க நிலை?

மேலும், கல்விப் பணிமனையினைச் சேர்ந்த அதிகாரிகளால், எழுதப்பட்ட புத்தகத்தினால், அவரது மகனைக்கூட 5ந் தரத்தில் சித்தியடைய முடியாமல் போனதற்கான காரணம் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிடுகின்றனர்.

இது பற்றிய ,கல்வி ஆதாரங்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளோடு, பாதிக்கப்படும் வறிய மாணவர்களின் நன்மை கருதி,இலவசமாக வழக்காடுமாறும் சட்டத்தரணிகளையும் கோரி நிற்கின்றனர்.