கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து சில காலம் விலகியிருக்க போவதாக மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
காஞ்சன விஜேசேகர தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இணையவோ, மைத்திரி அணியில் இணையும் நோக்கிலோ தான் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நிலைப்பாட்டை சரியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற உள்ளதாகவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தள்ளார்.
காஞ்சன விஜேசேகர முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகரவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மகிந்த விஜேசேகர மாத்தறையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment