சம்மாந்துறையில் சிறுவனின் சடலம்



-அஸ்லம் எஸ்.மௌலானா- 
சம்மாந்துறை ஏழாம் பிரிவில் ஒன்பது வயதான அப்துஸ் ஸலாம் தாலிக் அஹமட் என்ற சிறுவன்,  தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்; எனப் பொலிஸார் தெரிவித்தனர். சமையலறையில் வேலையை முடித்துவிட்டு  இச்சிறுவனின் தாய், பூட்டிய நிலையில் இருந்த படுக்கையறையை திறந்தபோது மகன் உயிரிழந்தது கிடப்பதைக் கண்டுள்ளார். இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.