--------------------------------------------------
சனிக்கிழை இரவு 'மூன்று சம்பவங்கள்' இடம்பெற்றுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டன் பிரிட்ஜ் பகுதி, மேம்பாலம், பரோ மார்க்கெட் பகுதியிலுள்ள அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் காவல்துறையினர் உத்தரவு.
வாக்ஸால் பகுதியில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லண்டன் மாநகர் காவல்துறையின் சமூக ஊடகப் பக்கத்திலும், டிவிட்டரிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னிரவு 11.45 நிலவரம்
-------------------------------------------
லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற இத்தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர்.
பாதசாரிகள் மீது வாகனத்தை ஏற்றியும், கத்தியைக் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது என்று காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதல் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடுவதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
பிரதமர் தெரீசா மே உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் பிரெஞ்ச் பெண்மணி என்று தற்போது வரும் செய்திகள் கூறுகின்றன.
தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகிலுள்ள 'லண்டன் பிரிட்ஜ்' சுரங்கப்பாதை ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
முந்தைய பதிப்பு (பின்னிரவு 11.35)
-------------------------
லண்டனின் மத்தியில் இருக்கும் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் சனிக்கிழமை பின்னிரவு பாதசாரிகள் மீது வாகனத்தை ஏற்றி தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இரவு 11 மணியளவில், அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த பாதாசாரிகள் மீது வெள்ளை வாகனம் ஒன்று மோதி ஏறிச்சென்றுள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
உடனடியா அந்தப் பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், பல்தரப்பின் உதவியை நாடியுள்ளனர்.
இதையடுத்து அந்தப் பாலம் இருபுறமும் உடனடியாக மூடப்பட்டது.
அந்தப் பாலத்துக்கு அருகில் இருக்கும் சதர்க் பாலமும் மூடப்பட்டு பேருந்துகள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.
அருகிலிருக்கும் பரோ பகுதியின் முக்கிய சாலையும் மூடப்பட்டு ஆயுதமேந்திய காவல்துறையினர் வந்தடைந்தனர்.
தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் அங்கு இருந்த பிபிசி செய்தியாளர் ஒருவர் அந்த வாகனம் மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் வந்தது போலத் தெரிந்தது என்று கூறுகிறார்.
வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய நபர் குறைந்தது ஆறுபேரை இடித்து தள்ளினார் என்றும் எமது செய்தியாளர் மேலும் கூறுகிறார்.
வாகன ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment