-எம்.எஸ்.எம்.ஹனீபா-
அட்டாளைச்சேனைக் கல்விக் கல்லூரிக்குத் தெரிவாகிய 2016 -2018ஆம் கல்வி ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்ட புதிய பயிலுநர் ஆசிரிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை, எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே, அன்றையதினம் காலை 8.30 மணிக்கு முன்னர் கல்லூரிக்கு மாணவர்கள் வருகைதர வேண்டும் என, அக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாணவர்களுக்கான பதிவுகள் கடந்த 20ஆம், 22ஆம், 23ஆம் திகதிகளில் நடைபெற்றன.
ஆரம்பப் கற்கைநெறிக்கு 125 பேரும்;, விஞ்ஞானப்பாடக் கற்கைநெறிக்கு 40 பேரும் கணிதபாடக் கற்கைநெறிக்கு 20 பேரும், இஸ்லாம் பாடக் கற்கைநெறிக்கு 25 பேரும், விசேட கல்விப் பிரிவுக்கு 15 பேரும் இம்முறை தெரிவாகியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment