கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் போராட்டம்



கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

நேற்றைய தினம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டமானது இரண்டாவது நாளாக இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

குறிப்பிட்ட கால எல்லைக்குள் பட்டப்படிப்பை பூர்த்தியாக்கு, மஹபொல புலமைப்பரிசில் பிரச்சினைகளை உடன் நிவர்த்தி செய், பொய்யான தீர்வு வேண்டாம் விடுதி வசதிப் பிரச்சினையை உடனே நிவர்த்தி செய், நிர்வாகிகளே மாணவ அடக்குமுறைகளை நிறுத்து, அசாதாரண வகுப்புத் தடைகளை நீக்கு, நிர்வாகிகளே மாணவ சுதந்திரத்தைப் பறிக்கும் சி.சி.டி.வி கமராக்களை உடனே அகற்று போன்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கபட்டது. 

மாணவர்களால் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

இப்போராட்டத்தில் மாணவர்கள் கட்டம் கட்டமாக ஈடுபடுவதாகவும், மாணவர்களின் இந்த ஐந்து கோரிக்கைகளுக்கும் உரிய நிரந்த தீர்வு கிடைக்கும் வரை இப் போராட்டம் முடிவுறுத்தப்பட மாட்டாது எனவும் இதன் போது மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது