காலி - கொழும்பு பிரதான வீதியின் இந்துருவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி எதிரே வந்து காருடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்து மற்றொரு நபரும் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடகம, கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்து காயமடைந்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஸ்கொட பொலீஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Post a Comment
Post a Comment