அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் வைத்தியரின் மனு நிராகரிப்பு



தமது குற்றச்சாட்டுக்கு எதிராக இலங்கையில் பிறந்த பெண் வைத்தியர் தாக்கல் செய்த மனுவை, அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தனது கணவரை கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையில் பிறந்த பெண் வைத்தியரான ஷாமரி லியனகே என்பவருக்கு 2014ஆம் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அவருக்கு விடுமுறை அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் விடுதலை வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமது சிறைத்தண்டனை மற்றும் குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை இன்று அவுஸ்திரேலியாவின் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்போது ஷாமரி நீதிமன்றத்தில் சமுகமளித்திருக்கவில்லை. தமது கணவரின் பாலியல் தொல்லை தாங்கமுடியாமை காரணமாகவே அவரை கொலை செய்ததாக ஷாமரி விசாரணைகளின்போது தெரிவித்திருந்தார்.
தான் விடுதலைசெய்யப்பட்டால் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படலாம் என்ற அச்சத்தை வெளியிட்டிருந்த அவரின் மனு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளமையால், அவருக்கு 2004ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனையின் மேலதிக காலத்துக்காக அவர் சிறை செல்லவேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.