ஞானசாரருக்கு பிடியாணை




பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானாசார தேரருக்கு எதிராக இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புனித அல்குர்னை அவமதித்தல் மற்றும் வட்டரக்க விஜித தேரரின் ஊடக சந்திப்பில் குழப்பம் எற்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணக்காக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமையின் காரணமாகவே அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.