வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், பயனாளிகள் இருவரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் கிழக்கு 2ஆம் குறிச்சியிலுள்ள பல்தேவைக் கட்டடத்தில் புதன்கிழமை (14) சமுர்த்திப் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, தன் குடும்பத்துக்கு கடன் வழங்கவில்லை எனக் கூறி, சமுர்த்தி உத்தியோகத்தர் மீது துடுப்பு அட்டையால் சமுர்த்திப் பயனாளிகளான தந்தையும் மகனும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


Post a Comment
Post a Comment