அம்பியூலன்ஸ் அன்பளிப்பு



மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவின் வேண்டுகோளுக்கமைய, ஜப்பான் - இலங்கை நட்புறவு மன்றத்தால், 450 இலட்சம் ரூபாய்  பெறுமதியான தீயணைப்பு இயந்திரம், 350 இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன தொழிநுட்பத்துடனான அம்பியூலன்ஸ் ஆகியவை, இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கும் வைபவம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்றது.
ஜப்பான் - இலங்கை நட்புறவு மன்றத் தலைவர் கலாநிதி லால் திலகரத்ன மற்றும் திருமதி எரங்கா திலகரத்ன ஆகியோரால், அவற்றுக்குரிய ஆவணங்கள், ஜனாதிபதியிடம்  ஒப்படைக்கப்பட்டன.
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவும், இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.