திடீர் விஜயம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். 

இன்று காலை அங்கு சென்ற அவர், வைத்தியசாலை நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, டெங்கு விஷேட சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விஷேட வைத்தியருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், டெங்கு நோயாளர்கள் தங்கியிருக்கும் அறையின் வசதிகளை விஸ்தரிக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

அத்துடன் வைத்தியசாலைகளின் ஏனைய விடயங்கள் குறித்தும் ஆராய்ந்த ஜனாதிபதி, இது தொடர்பில் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.