அக்கரைப்பற்றில் அதிகாலையில் #Axio கார் #kubota வண்டியை ஸ்பரிசித்தது



இன்று அதிகாலையில், அஸ்ஸிராஜ் சந்தியி்ல் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்ச் சாரதி எதிர்த் திசையில் வந்த குபோட்டாவுடன் மோதியுள்ளார். குபோட்டா செலுத்துனர் தெய்வாதீனமாக உயிர் தப்பி, சிறு காயங்களுங்களுடன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குபோட்டாவின் முன் சில்லும் உடைந்த.இயங்கா நிலையில் காணப்படுகின்றது.(கூலித் தொழிலாளியின் உழைப்புக்கு விழுந்ததோ பலத்த அடி.)

ஆடம்பரக் காரின் சாரதி, காற்றுப்  பையினால்தான்  காப்பாற்றப்பட்டுள்தாகத் தெரிவிக்ககப்படுகின்றது.(காப்புறுதியில் இழந்ததைப் பெற்றுக் கொள்வார்)

அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய வீதிகளில், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதி விபத்தைக் குறைக்கும் தடைகளை ஏற்படுத்தவில்லை என பொது மக்கள் விசனிக்கின்றனர்.இது தொடர்பில் பல தடவைகள் முறையிட்டுள்ளதாகவும், தக்க நடவடிக்கை எதுவுமின்றி, அசமந்தப் போக்கில் குறித்த சபை காணப்படுவதாகவும், புகாரிடுகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே இது உங்கள் கவனத்திற்கு!