இலங்கை மற்றும் இந்தோனேஷியாவுக்கு இடையே சமூக நீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார வசதிகள் முதலான துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இதற்காக, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தின், நீர் வழங்கல் கருத்திட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்று, எதிர்வரும் 8ஆம் திகதி, இந்தோனேஷியா தலைநகர் ஜஹர்த்தா நோக்கிப் புறப்படவுள்ளது.
உலக வங்கியின் அணுசரனையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு, விமானப் பயணச்சீட்டு வழங்கும் வைபவம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment