சாமர கப்புகெதர இணைப்பு



சிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் சாமர கப்புகெதர இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உறுதிப்படுத்தினார்.
சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மைதானத்தில் நாளை (06) நடைபெறவுள்ளது.
35,000 இருக்கைகளைக் கொண்ட இந்த மைதானத்தில் இறுதியாக 2015 ஜூலை 26 ஆம் சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் இலங்கை அணி 17 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் அவற்றில் 7 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
ஏனைய 4 போட்டிகளும் முடிவின்றிக் கைவிடப்பட்டுள்ளன.
சிம்பாப்வேக்கு எதிரான தொடரில் எஞ்சிய 3 போட்டிகளுக்கான இலங்கை குழாத்திலிருந்து சகலதுறை வீரரான லஹிரு மதுஷங்க, சுழற்பந்துவீச்சாளரான அமில அபொன்சு ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக சாமர கப்புகெதரவும் வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மாலும் பெயரிடப்பட்ட போதிலும் சுரங்க லக்மால் சுகவீனமடைந்திருப்பதால், நுவன் குலசேகர அழைக்கப்பட வாய்ப்பிருப்பதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஞ்சலோ மெத்யூஸ் கூறினார்.