பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துபவர்கள் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும்: சுவாமிநாதன்,

வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துகின்றவர்கள் முதலில் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பில் இன்றைய சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் ஆலோசனையின் பிரகாரமே தான் இந்த வீட்டுத் திட்டத்தை கொண்டு வந்ததாகவும் எக்காரணத்திற்காக இதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பெரிய மாளிகையில் வாழ்கின்றனர் எனவும் அவர்கள் இத்திட்டத்திற்காக எந்த ஒரு உதவியும் செய்ய வில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு எதிர்ப்பை வெளியிடுகின்றவர்கள் தங்களது திட்டத்தை முன்மொழிய வேண்டும் எனவும் அவர்கள் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துபவர்கள் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும்: சுவாமிநாதன் IN UPDATED: 17:27 GMT, JUL 6, 2017 | PUBLISHED: 16:15 GMT, JUL 6, 2017 | 0 COMMENTS 1209 This post was written by : Surenth வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துகின்றவர்கள் முதலில் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.