அபேராம விகாரையை அரசியலுக்குப் பயன்படுத்த தடை



நாரஹேன்பிட்டி, அபேராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அபேராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதால், அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.